எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டம் .!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்,
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரை டெல்லியில் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி லண்டன் பேட்டை BSNL அலுவலகம் முன்பாக பெரும் திரளாக திரண்ட காங்கிரஸ் கட்சியினர் பீகார் மாநில சட்ட மன்றத் தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள சிறப்பு திருத்த வாக்களர் பட்டியலில் பெருமளவில் முறைகேடுகள் நடந்து இருப்பதை சுட்டிகாட்டி, டெல்லி பாராளுமன்றத்தில் இருந்து இந்திய கூட்டணி கட்சியின் தலைவர் தலைமையில் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிர்கட்சி எம்.பி.கள் இந்திய தேர்தல் ஆணையத்தினை நோக்கி பேரணியாக சென்றவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி ராகுல் காந்தி, பிரியாங்கா காந்தி உள்ளிட்டவர்களை கைது செய்த காவல் துறையினரின் செயலை கண்டித்து கோசங்களை எழுப்பியவாறு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த தீடீர் சாலை மறியல் போராட்டத்தின் போது மத்திய அரசின் தூண்டுதலின் பெயரில் கைது செய்யப்பட்ட எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி கண்டன கோசங்களை எழுப்பினர்.
மத்திய அரசினைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட கிராம சீரமைப்பு கமிட்டி பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநில பொதுச் செயலாளர் ஏகாம்பவாணன், முன்னாள் மாவட்ட தலைவர்கள் ஜேசு துரைராஜ், நாராயண மூர்த்தி, ராஜகுமாரவேல், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் பி.சி.சேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரகு , முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் துரை என்ற துரைசாமி, மாநிலச் செயலாளர் ஆறுமுகம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஆறுமுக சுப்பிரமணி, மாவட்ட துணைத் தலைவர் தளபதி ரகமத்துல்லா, கலைப் பிரிவு மாவட்டத் தலைவர் கோவிந்தசாமி, கவுசிலர் வினாயகம்,முன்னாள் கவுசிலர் முபாரக், நகர தலைவர் லலித் ஆண்டனி , முன்னாள் நகர தலைவர்கள் வின்சென்ட், இருதயம்,தொகுதி பொறுப்பாளர் டாக்டர் தகி, வட்டாரத் தலைவர்கள் முனியப்பன், நஞ்சுண்டன், கோபாலகிருஷ்ணன், சித்திக், தனஞ்செயன், யுவராஜ், கிருஷ்ணமூர்த்தி,சசிகுமார், அர்னால்டு ரமேஷ், கவுன்சிலர் விநாயகம், மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளான சக்கரவர்த்தி, சரவணன், கவியரசன், முனீர், மாரியப்பன், சக்திவேல், ஸ்ரீராம், கோபாலசாமி, சசி, முனியப்பன் ,சபீர், யுவராஜ், சங்கர் ,வினோத், பிரசாந்த் பாலு, பாலகிருஷ்ணன்,தங்கையன், பாண்டுரங்கன், ராஜ்குமார், காமராஜர், விஜய், ஏழுமலை, சபீக், அஹமத், பாபு குட்டி (எ) விஜயராஜ், மாவட்ட பொதுச் செயலாளர் அப்சல் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோசங்களை எழுப்பினார்கள்.
செய்தியாளர்
மாருதி மனோ