ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் சார்பாக மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவம் பார்த்து தாயகம் அனுப்பினர். !
த மு மு க

மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரர் சவரிமுத்தை மீட்டு மருத்துவ உதவி செய்து தாயகம் அனுப்பி வைத்த ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் (????????????)
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த சவுரிமுத்து என்கின்ற சகோதரர் ரியாத்தில் வீட்டு ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் அவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றார் என்ற தகவல் மண்டல தலைவர் மீமிசல் நூர் முஹம்மது மற்றும் சமூக நலத்துறை செயலாளர் கொடிபள்ளம் சாதிக் பாஷா ஆகியோருக்கு கிடைத்தது, அதன் அடிப்படையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு சென்று அவருக்கு தேவையான உதவிகள் மற்றும் தாயகம் அனுப்பி வைக்கக்கூடிய பொறுப்பை ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் முழுமையாக ஏற்றுக் கொள்ளும் என்ற உத்திரவாதத்தை மருத்துவர்களிடம் தெரிவித்ததுடன் தொடர்ச்சியாக மண்டல சமூகநலத்துறை துணைச் செயலாளர் வல்லம் செய்யது அலி அவர்கள் மருத்துவமனைக்கு தினமும் சென்று கவனித்து வந்தார்.
உடனடியாக ஒரு வாட்ஸ் அப் குழுமத்தை உருவாக்கி அவருக்கு தேவையான உதவிகளை செய்து வந்தோம், பின்பு மூன்று மாதங்களுக்கு பிறகு சற்று உடல்நலம் தேறினார், இருப்பினும் அவருக்கு பழைய நினைவுகள் அனைத்தும் மறந்து போய்விட்ட காரணத்தால் அவரை தாயகம் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது.
உடனடியாக அஜிசியா கிளை செயலாளர் வினோத் குமார் பாதுகாப்பில் ஒரு மாத காலம் தனி அறையில் வைத்து அவரை பராமரித்து வந்தனர்.
பின்பு சவுரிமுத்துவை தாயகம் அனுப்பி வைத்து விடலாம் என்று முடிவு செய்து ரியாத் மண்டல சமூக நலத்துறை செயலாளர் கொடிபள்ளம் சாதிக் பாஷா மற்றும் சமூகநலத்துறை துணை செயலாளர் வல்லம் சையத் அலி ஆகியோரின் முழு முயற்சியினால் இந்திய தூதரகத்தின் முழு ஒத்துழைப்புடன் சவுரிமுத்து அவர்களுக்கு எக்ஸிட் அடித்து 07/07/2025 திங்கட்கிழமை அன்று ரியாத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையம் வரை செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
அவர் பயணத்திற்கான விமான டிக்கெட் முழுத் தொகையை தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ஏற்றுக்கொண்டார் என்பதை நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என ரியாத் மண்டல நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
சவுரிமுத்துவை தாயகம் அனுப்புவதற்கு எங்களுக்கு உறுதுணையாக இருந்த கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அலையன்ஸ் என்கின்ற சகோதரர் தன் குடும்பத்தோடு விடுமுறையில் தாயகம் செல்வதற்கு இருந்த நிலையில் சவரிமுத்து அவர்களையும் நானே அழைத்துச் சென்று அவர்களுடைய உறவினர் இடத்தில் ஒப்படைத்து விடுகின்றேன் என்று சொன்னதற்கு இணங்க, ரியாத்தில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையம் வரை கொண்டு போய் சவுரிமுத்து அவர்களின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்த அரும்பணியில் ஈடுபட்ட ரியாத் மண்டல மனிதநேய சேவகர்களுக்கு சவுரிமுத்துவின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.