இலஞ்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் ஆட்சியர் (பொறுப்பு) ஜெயச்சந்திரன், எம்பி பங்கேற்பு.!
தென்காசி

இலஞ்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் ஆட்சியர் (பொறுப்பு) ஜெயச்சந்திரன், எம்பி பங்கேற்பு
தென்காசி ஆகஸ்ட் 30
தென்காசி மாவட்டம் இலஞ்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மூலம் ராமசுவாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் வைத்து நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் ( பொறுப்பு ) ஜெயச்சந்திரன் தலைமை வகித்து முகாமினை தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணிஸ்ரீ குமார் கலந்து கொண்டு முகாமினை பார்வையிட்டார்.
இந் நிகழ்ச்சியில் தென்காசி சட்டமன்றத் தொகுதி பார்வையாளர் கலைக்கதிரவன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி, ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம், இலஞ்சி பேரூராட்சி செயல் அலுவலர் குமார் பாண்டியன், இலஞ்சி பேரூராட்சி தலைவர் சின்னத்தாய் சண்முகநாதன், இலஞ்சி பேரூர் திமுக செயலாளர் முத்தையா, மாவட்ட பிரதிநிதிகள் சுடலையாண்டி, ஜெயக்குமார் பாண்டியன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் சண்முகநாதன், சுப்பிரமணியன், இலஞ்சி குமார கோவில் அறங்காவலர் குழு தலைவர் பூவையா, அறங்காவலர்குழு உறுப்பினர் சுந்தர்ராஜன், ஒன்றிய பிரதிநிதி கணேச மூர்த்தி, தேவி, செல்லப்பா, மகேஸ்வரன், வசந்தகுமார், இசக்கி, நித்யா, செண்பக குமார், ராஜேஸ்வரி, மருதாச்சலம், ராமசாமி, பொன் வேலன், அழகுதுரை, ரகுபதி, ராமசுப்பிர மணியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்