குற்றாலம் அறங்காவலர் குழு தலைவர் குற்றாலம் கோவில் இடங்களில் ஆய்வு.!
தென்காசி
குற்றாலம் அறங்காவலர் குழு தலைவர் குற்றாலம் கோவில் இடங்களில் ஆய்வு.!
தென்காசி மே 28
தென்காசி மாவட்டத்தில் பழமையும், பிரசித்தி பெற்ற திருக் கோயில்களில் ஒன்றான குற்றாலம் அருள்மிகு திருக்குற்றால நாத சுவாமி திருக் கோவில் அறங்காவலர் குழு தலைவர் சக்தி முருகேசன் தலைமையில் உதவி ஆணையர்/நிர்வாக அதிகாரி ஆறுமுகம், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் வீரபாண்டியன், சுந்தர்ராஜன் முன்னிலையில் அலுவலக ஊழியர்களுடன் ஆய்வு மேற்க்கொள்ளப்பட்டது.

குற்றாலம் சாரல் காலங்களில் வரும் யாத்திரிகர்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவச கழிப்பிடங்கள், கார் நிறுத்துமிடம் மற்றும் இலவச உடை மாற்றும் அறைகள் அமைத்துக் கொடுப்பது தொடர்பாக இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து ஆலோசனை மேற் கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்
