மேட்டுப்பாளையம் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம். !

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம். !

உங்களுடன் ஸ்டாலின் முகாம். !

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதி தங்கப்பா திருமண மண்டபம், வியாபாரிகள் சம்மேளனம் ஆகிய பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.

முகாமில் மக்களுக்குத் தேவையான வருவாய் துறை சார்ந்த பணிகள், மருத்துவ முகாம், மகளிர் உரிமைத் தொகை,  காப்பீடு போன்ற எண்ணற்ற பணிகளை மக்களுக்கு எளிதில் கிடைக்க தமிழ்நாடு முழுவதும் இந்த முகாம்கள் நடத்தப்படுகின்றன.

இம்முகாமில் மாநில மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

முகாமில் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி, மாநில செயற்குழு உறுப்பினர் அஸ்ரப் அலி, கோவை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கதிரவன் எம்.ஏ.ஆர்.கே. ஹக்கீம், மேட்டுப்பாளையம் வடக்கு நகர செயலாளர் சி.முகமது யூனஸ்,  தெற்கு மாவட்ட செயலாளர் முனுசாமி, நகரமன்ற தலைவர் மெஹ்ரிபா பர்வீன், நகர மன்ற துணை தலைவர் அருள் வடிவு முனுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

முகாமில் மேட்டுப்பாளையம் வட்டாட்சியர்,  நகராட்சி ஆணையர், வால்பாறை வட்டாட்சியர் ரமேஷ் மற்றும் அரசு மருத்துவர்கள், காவல்துறையினர், மற்றும் இதர அரசு துறையினர் கலந்து கொண்டு மக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுத்தனர்.

மேலும் முகாம்களில் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

செய்தியாளர்

      லூயிஸ் 

ஆசிரியர் & வெளியீட்டாளர்

மேட்டுப்பாளையம் Rafi ( MR )