தென்காசியில் விசிக ஆர்ப்பாட்டம் .!
தென்காசி

தென்காசியில் விசிக ஆர்ப்பாட்டம்
தென்காசி ஆகஸ்ட் 12
தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி தென்காசி ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் மத்திய மாநில அரசு நாட்டில் தொடரும் சாதிய ஆணவ படுகொலைகளை தடுத்திட சிறப்பு தனி சட்டம் உடனேஇயற்ற வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் பண்பொழி செல்வம் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட செயலாளர் ஜான் தாமஸ் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் கமல் துறை அரசு வரவேற்புரை ஆற்றினார். இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாநில செயலாளர் சங்க தமிழன் கண்டன உரை ஆற்றினார்.
மண்டல துணை செயலாளர் சித்திக், குழந்தை வள்ளுவன், தென்காசி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் வர்கீஸ், மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன், மாவட்ட செய்தி தொடர்பாளர் சந்திரன், மாநில துணை செயலாளர் மோசஸ், தென்காசி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் வெற்றி செல்வி, கஸ்தூரி, ரீகன்குமார், சுலைமான், பொதிகை வளவன், சண்முகசுந்தரம், எஸ்ரா டேனியல், விவேக், இளஞ்சேரன், மாரிமுத்து, பெரியசாமி, தங்கராஜ், விவேகானந்தன், வேலுச்சாமி,கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் பாக்கியராஜ், வேல்முருகன், சேகர், திருமலைகுமார், மேற்கு மாவட்ட நிர்வாகிகள் சாமிதுரை, சுரேஷ்குமார், இசக்கி பாண்டியன், பிரியங்கா, ராமலட்சுமி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் பொன்னுச்சாமி, குட்டிவளவன், ஜெயபாலன், லிங்கம், பண்டாரம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்,முடிவில் நகர செயலாளர் ஹக்கீம் நன்றி கூறினார்.
செய்தியாளர்
AGM கணேசன்