எடப்பாடியார் பிரச்சாரக் கூட்டத்தில் பல இலட்சங்களை பிக் பாக்கெட் அடித்த 6 பேரை கைது செய்த காவல்துறையினர் .!

மேட்டுப்பாளையம்

எடப்பாடியார் பிரச்சாரக் கூட்டத்தில் பல இலட்சங்களை பிக் பாக்கெட் அடித்த 6 பேரை கைது செய்த காவல்துறையினர் .!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மக்களிடையே வாகனப் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்த பிரச்சாரத்தின் போது மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள அம்மையப்பன் மஹாலில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரச்சாரத்தில் கலந்து கொண்டார்.

காரமடையைச் சேர்ந்த தங்கராஜ் என்பவர் கூட்டத்தில் நின்று கொண்டிருக்கும் போது தனது பாக்கெட்டில் உள்ள 50,000 ரூபாயை யாரோ பிளேடால் பாக்கெட்டை கிழித்து பணத்தை எடுத்துள்ளனர்.

இதையறிந்த தங்கராஜ் செய்வதறியாது தனது நண்பர்களிடம் கூறியுள்ளார். அப்போது தங்கராஜின் நண்பர்களும் தங்களது பாக்கெட்களில் இருந்த பணத்தை காணவில்லை எனக் கூற அனைவரும் காவல்நிலையம் வந்து புகார் அளித்துள்ளனர்.

தங்கராஜ் ரூ 50,000, செல்வராஜ் ரூ 7,000, ஆனந்தன் ரூ 40,000, சரவணகுமார் ரூ 5,000, சுரேஷ் ரூ 5,000, வீரப்புத்திரன் ரூ 15,000 ஆகியோரின் பாக்கெட்களில் காணாமல் போனதாக புகார் அளித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் சின்ன காமனன் மற்றும் காவலர்கள் மற்றும் தனிப்படை காவலர்கள் ஆகியோர் இணைந்து பல பகுதிகளிலும் தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 6 பேரை விசாரித்துள்ளனர். 

விசாரணையில் பிக் பாக்கெட் அடித்தது இவர்கள் தான் என தெரிய வந்தது.

விசாரணையின் அடிப்படையில் சென்னையை சேர்ந்த ராஜி ( 40 ), கோவையை சேர்ந்த குண்டு ராஜன் (எ) ராஜா (47)  , ஆந்திராவைச் சேர்ந்த சுரேஷ் ( 38 ) , ரமேஷ் (37) , தர்மபுரியைச் சேர்ந்த கோபால் (40) , திருச்சியைச் சேர்ந்த அருள்குமார் ( 57) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர் மேட்டுப்பாளையம் காவல் துறையினர்.

ஆசிரியர் & வெளியீட்டாளர்

மேட்டுப்பாளையம் Rafi ( MR )