அதிமுக - வின் அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் செங்கோட்டையன் நீக்கம், எடப்பாடி கே. பழனிச்சாமி அதிரடி. !

அதிமுக

அதிமுக - வின் அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் செங்கோட்டையன் நீக்கம், எடப்பாடி கே. பழனிச்சாமி அதிரடி. !

அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையன் அனைத்துக் கட்சிப் பொறுப்புகளில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார், அதிமுகவில் உட்கட்சி பூசல் உச்சகட்ட நிலையை அடைந்துள்ள நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் எடப்பாடி பழனிச்சாமிக்கு 10 நாள் கெடு விதித்திருந்தார்.

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அல்லது விலகிய மூத்த தலைவர்களை உடனடியாக கட்சிகள் கொண்டு வந்து ஒருங்கிணைந்த அதிமுகவாக உருவாக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார், மேலும் இபிஎஸ் சசிகலா டிடிவி ஆகியோரை கட்டாயம் கட்சிக்குள் கொண்டுவர வேண்டுமென மறைமுகமாகவும் எடப்பாடிக்கு அவர் கெடு விதித்தார் இதனால் மிகுந்த எரிச்சலுக்கு ஆளான எடப்பாடி பழனிச்சாமி நேற்று தனது சில நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு தீவிர ஆலோசனை மேற்கொண்டார் அதன் அடிப்படையில் கோபிசெட்டிபாளையம் தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் செங்கோட்டை எனை அதிமுக கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதன்படி அதிமுகவின் கழக அமைப்புச் செயலாளர்கள் என்ற உயர்ந்த பதவியும் பறிக்கப்படுகிறது இது மட்டும் இல்லாமல் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டு தற்போது கட்சி பதவிகள் அனைத்தும் பிடுங்கப்பட்டு நிராகதியாக மாறி உள்ளார் செங்கோட்டையன்.

தலைமைக் கழக அறிவிப்பு

கழகப் பொதுச் செயலாளர், சட்ட மன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் முக்கிய அறிவிப்பு

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும்

திரு. K.A. செங்கோட்டையன், M.L.A., அவர்கள் இன்று முதல் அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.