உங்களுடன் ஸ்டாலின்" 46- சேவைகள் கொண்ட திட்ட முகாம் .!
கிருஷ்ணகிரி

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில், பொதுமக்களுக்கு அனைத்து திட்டங்களும் ஒரே இடத்தில் உடனடியாக கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் "உங்களுடன் ஸ்டாலின்" 46- சேவைகள் கொண்ட திட்ட முகாம், கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் மேற்கு ஒன்றியம், சுண்டேகுப்பம் ஊராட்சி, திம்மாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
திட்ட முகாமில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளருமான, பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே. மதியழகன்., MLA கலந்துகொண்டு திட்ட முகாமினை பார்வையிட்டார்.
உடன் அனைத்து துறை அரசு அதிகாரிகள் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், கழகத் தோழர்கள், வட்ட செயலாளர்கள், வட்ட பிரதநிதிகள்,வார்டு உறுப்பினர்கள்,ஊர் பொதுமக்கள் என அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ