சிமெண்ட் கல் அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை .!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதி, பர்கூர் தெற்கு ஒன்றியத்திற்க்கு உட்பட்ட ஜெகதேவி ஊராட்சியில் ஜெகதேவி மசூதி தெருவில் சிமெண்ட் கல் அமைக்கும் பணிகளுக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே. மதியழகன்., MLA பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர் பொதுமக்கள் என அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ