எரிவாயு விநியோகஸ்தர்கள் மற்றும் தன்னார்வ நுகர்வோர் அமைப்புக்களின் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் .!

கிருஷ்ணகிரி

எரிவாயு விநியோகஸ்தர்கள் மற்றும் தன்னார்வ நுகர்வோர் அமைப்புக்களின் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் .!

இன்று 28 08 2025 கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட எரிவாயு விநியோகஸ்தர்கள் மற்றும் தன்னார்வ நுகர்வோர் அமைப்புக்களின் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற்றது 

இதில் arise And shine missionary diocese new anglican synod All india general secretary,Rt Rev AMB Dr km Daniel chakkaravarthi சிறுபான்மையினர் நுகர்வோர் விழிப்புணர்வு நல பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் மற்றும் federation of Indian NGO's and humanity service State general secretary கலந்து கொண்டு எரிவாயு நுகர்வோர்களின் குறை தீர்க்க மதிப்பிற்குரிய கிருஷ்ணகிரி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலர் திருமதி ராஜேஸ்வரி  அவர்களிடத்தில் கோரிக்கை மற்றும் ஆலோசனை மனுவை கொடுத்தார். 

மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலர் திருமதி ராஜேஸ்வரி இந்த மனுவினை  பரிசீலனை செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். 

மேலும் இக்கூட்டத்தில் சமுக நுகர்வோர் விழிப்புணர்வு நல பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் km.சந்திர மோகன் உட்பட அனைத்து நுகர்வோர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ