உழவர் தின பேரணிக்கு பெரும் திரளாக விவசாயிகள் கலந்துக் கொள்ள வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் .!

கிருஷ்ணகிரி

உழவர் தின பேரணிக்கு பெரும் திரளாக விவசாயிகள் கலந்துக் கொள்ள வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் .!

கிருஷ்ணகிரியில் ஜுலை 5-ம் தேதி சனி கிழமை நடைப்பெற உள்ள உழவர் தின பேரணிக்கு பெரும் திரளாக விவசாயிகள் கலந்துக் கொள்ள வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் இராம கவுண்டர் வேண்டுகோள்.

கிருஷ்ணகிரியில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட உள்ள உழவர் தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஜூலை 5-ம் தேதி சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது.

இது குறித்து தனது செய்தி குறிப்பில் செய்தி வெளியிட்டுள்ள தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் இராமகவுண்டர் மாலை 4 மணி அளவில் கிருஷ்ணகிரி பழைய பேட்டை காந்தி சிலை அருகில் இருந்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட உள்ள பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு விவசாயிகள் அனைவரும் கலந்துக் கொள்ள வேண்டும் என்றும், மேலும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி நடத்தப்படும் இந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு விவசாயிகள் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டால் மட்டுமே நம்முடைய தீர்மானம் நிறை வேற்றப்படும். விவசாயிகளின் கோரிக்கையை வெற்றெடுக்கும் வகையில் நடத்தப்பட உள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் வட மாநில தேசிய விவசாய சங்கத் தலைவர்களும் இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளனர். 

ஆகையால் நம்முடைய நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிட விவசாயிகளான நாம் ஒரே அணியில் கலந்து விவசாயிகளின் பலத்தினை இந்த பேரணி வாயிலாக காண்ட பெரும் திரளாக விவசாயிகள் கலந்துக் கொள்ள வேண்டும் என, மாநில தலைவர் இராம கவுண்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.

செய்தியாளர்

மாருதி மனோ