தமிழ்நாடு தமிழ் வளர்ச்சித் துறையின்  சார்பில் திருக்குறள் திருப்பணி நிறைவு விழா!

கிருஷ்ணகிரி

தமிழ்நாடு தமிழ் வளர்ச்சித் துறையின்  சார்பில் திருக்குறள் திருப்பணி நிறைவு விழா!

கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழ்நாடு தமிழ் வளர்ச்சித் துறையின்  சார்பில் திருக்குறள் திருப்பணி நிறைவு விழா கம்பன் கழகம் சார்பாக கிருஷ்ணகிரி பழையபேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில்  நடத்தப்பட்டது 

இதில் கிருஷ்ணகிரி மாவட்ட கம்பன் கழக தலைவர் மதிப்புறு முனைவர் இ.ரவிந்தர் தலைமை தாங்கினார். அதில் கிருஷ்ணகிரி கம்பன் கழக பொருளாளர் மு. ஸ்ரீரங்கன் வரவேற்புரை ஆற்றினார்.

சிறப்பு விருந்தினராக கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ்நாடு தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் பா. கனிமொழி மற்றும் ஆசிரியர் தகடூர் தமிழ் கதிர் ஐயா ஆகியோர் கலந்து கொண்டு குறள் விளக்கு என்னும் புத்தகத்தை இன்று  அனைத்து  சான்றோர் முன்னிலையில் வெளியிட்டார்கள் மற்றும் வாழ்த்துரை வழங்க வந்த குழந்தை நல குழுமம் உறுப்பினர் மதிப்புறு முனைவர் அ. பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் தலைமை ஆசிரியர் நரசிம்மன் மற்றும் நகராட்சி  நடுநிலைப்பள்ளி பழையபேட்டையின் தலைமை ஆசிரியர் ந. தேவி சிறப்பாக மாணவர்களுக்கு திருக்குறளை பற்றியும் அதன் பயன்களை பற்றியும் கூறினார்கள்.

30 நாட்களாக திருக்குறளை பயின்ற 100 மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர். இதை சிறப்பாக நடத்திய திருக்குறள் திருப்பணி ஆசிரியர் டாக்டர் குரு மது மொழி  ஆனந்த் மற்றும் மதிப்புறு முனைவர் ஜெ.பாலாஜி, ஸ்ரீனிவாச கல்வி மையம்  திருக்குறள் பயிற்றுனர் மற்றும் மு. லதா, தமிழாசிரியை திருக்குறள் பயிற்றுனர் அவர்கள் சிறப்பாக திருக்குறள் பற்றி விரிவாக நடத்தினார்கள்.

விழா ஏற்பாடுகளை நகராட்சி நடுநிலைப்பள்ளியின் இருபால் ஆசிரியர்கள்  மற்றும் கம்பன் கழக பொறுப்பாளர் ஜி.கே.சினிவாசன்  செய்திருந்தனர். விழா முடிவில் நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆசிரியர் மதிப்புறு முனைவர் அ.பாலாஜி  நன்றி உரை கூறினார்.

செய்தியாளர் 

மாருதி மனோ