சென்னையில் ஹாஸ்டல் சாப்பாட்டுக்கு வந்த சோதனை!".. தோசை,இட்லி கட். சிலிண்டர் தட்டுப்பாட்டால் விடுதி உரிமையாளர்கள் எடுத்த 'பகீர்' முடிவு.!
சென்னை
சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாகச் சென்னையில் உள்ள விடுதிகளில் (Hostels) உணவுக் கட்டுப்பாடுகள் அதிரடியாகக் கொண்டுவரப்பட்டுள்ளன.
இதன்படி, விடுதிகளில் இனி டீ மற்றும் காபி வழங்கப்பட மாட்டாது என்றும், தோசை மற்றும் சப்பாத்தி வகைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும் விடுதி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சிலிண்டர் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் இனி கலவை சாதங்கள் மட்டுமே வழங்கப்படும் என்றும், வாரத்தில் இரண்டு முறை மட்டுமே அப்பளம் அல்லது முட்டை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேஸ் தட்டுப்பாட்டால் விடுதி உணவுகளில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் தங்கிப் பயிலும் மாணவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
