கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் கழகத்தின் சார்பில் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 78 வது பிறந்த நாள் விழா.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் கழகத்தின் சார்பில் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 78 வது பிறந்த நாள் விழா பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் நிகழ்ச்சி தொடர்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஓசூர் அருகே ஒன்னல்வாடி கிராமத்தில் மாவட்ட பிரதிநிதி ஜெயக்குமார் தலைமையில், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்ள் யோகாஆனந்தா ரெட்டி, முன்ரத்னா சீனிவாசன், முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் பிரப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் விழாவில் சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி கலந்து கொண்டு அம்மா அவர்கள் பிறந்தநாளுக்கு கேக்வெட்டி பொது மக்களுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு ஹாட் பாக்ஸ் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


உடன், ஒன்றிய கழக செயலாளர் ஹரிஷ் ரெட்டி, பகுதி செயலாளர் ராஜா, பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீஷ், ஓசூர் மாமன்ற உறுப்பினர் மல்லிகா தேவராஜ், பிஜேபி கட்சி நிர்வாகிகள், ஒன்னல்வாடி ஊர் பொதுமக்கள் முன்னாள் வார்டு உறுப்பினர்கள், கழக தோழர்கள் என கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
