பட்டா வழங்கிட வலியுறுத்தி பாதிக்கப்பட்ட கிராம மக்கள் கிராம நிர்வாக அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளியில் கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் ஏழை மக்களுக்கு பட்டா வழங்கிட வலியுறுத்தி பாதிக்கப்பட்ட கிராம மக்கள் கிராம நிர்வாக அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட குருப்பரப்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் அரசுக்கு சொந்தமான இடங்களில் சுமார் 460 குடும்பத்தினர் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருகின்றனர். கடந்த பல தலைமுறைகளுக்கும் மேலாக குடியிருந்து வரும் இவர்களுக்கு இலவச பட்டா வழங்கப்பட வேண்டும் என கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக பாரதிய ஜனதா கட்சியின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராமுலு தலைமையில் கிராம மக்கள்
பட்டா கேட்டு போராடி வருகின்றனர்.
ஆனால் இதுவரை எந்த ஒரு அரசும் நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்ட மக்கள் குருபரப்பள்ளி கிராம நிர்வாக அலுவலகத்தினை முற்றுகையிட்டு நூறு ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் ஏழை எளிய மக்களுக்கு பட்டா வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது நூறு ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் இடத்திற்கு பட்டா வழங்கிட வலியுறுத்தி கண்டன கோசங்களை எழுப்பினார்கள்.

இதனைத் தொடர்ந்து பேசிய பாரதிய ஜனதா கட்சியின் மாநில திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ ராமுலு குருபரப்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் சர்வே எண்.17.55,58 ஆகிய சர்வே எண்களில் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் சுமார் 460 பேருக்கு பட்ட இல்லாமல் வசித்து வருகின்றனர்.
இவர்கள் வசித்து வரும் வீடுகளுக்கு இலவச பட்டா கேட்டு கால் நூற்றாண்டுகளாக போராடி வருகிறோம், ஆனாலும் இது வரை எந்த அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை, இனியாவது இப்பகுதி மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் இல்லையேல் வருகின்ற 16-ம் தேதி வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அடையாள அட்டை ஆகியவற்றினை கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியரிடம் ஒப்படைத்து அனைத்து வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றி வருகின்ற சட்ட மன்ற தேர்தலை புறக்கணிப்பதோடு யாரையும் வாக்கு சேகரிக்க வரவிட மாட்டோம் என்று ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
அப்பேது குருபரப்பள்ளி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கோவிந்தன், வே.முருகன், செந்தில், கிருஷ்ணன், வேடியப்பன், வெங்கடேசன், பாபு உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
