செந்தாரப்பள்ளி ஆக்ஸ்ஃபோர்டு பப்ளிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.!

கிருஷ்ணகிரி

செந்தாரப்பள்ளி ஆக்ஸ்ஃபோர்டு பப்ளிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவி அருகே உள்ள செந்தாரப்பள்ளி ஆக்ஸ்ஃபோர்டு பப்ளிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெகதேவி அருகே உள்ள செந்தாரப்பள்ளி ஆக்ஸ்ஃபோர்டு பப்ளிக் பள்ளியில் படிக்கும் மழலையர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அன்னை கண்ணம்மாள் தர்மராஜன் கல்வி அறக்கட்டளை சார்பில் மழலையருக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

பள்ளியின் இயக்குனர் திருமதி கவிதாராணி மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு  சிறப்பு அழைப்பாளராக ஊத்தங்கரை அதியமான் கல்வி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஸ்ரீனி திருமால்முருகன் கலந்துகொண்டு இப்பள்ளியில் யு.கே.ஜி. முடித்து முதல் வகுப்பிற்கு செல்லும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மழலையர் பட்டங்களை வழங்கி வாழ்த்தி பேசினார். அப்போது பேசிய அவர் கல்வியின் சிறப்பு பற்றியும், வருங்கால மாணவர்கள் இச்சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய பணிகள்பற்றியும், ஒழுக்கம் சார்ந்த கருத்துக்களையும் எடுத்துரைத்தார். மேலும் மழலையர் மாணவர்கள் பட்டம் பெற்ற காட்சியை பார்த்து பெற்றோர்கள் மிகுந்த மகிழ்சியடைந்தார்கள்.

இந்த விழா முன்னதாக விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு  வகுப்புக்கள் வாரியாக முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, மாறுவேடப்போட்டிகள் உள்ளிட்ட பல்வேறுப்போட்டிகளிலும் வெற்றிப்பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டப்பட்டது. 

இந்த விழாவில் பள்ளியின் தாளாளர் மகேந்திரன், பள்ளியின் முதல்வர் அருள்சகோதரி ஜெசிந்தா முத்தையா, கராத்தே மாஸ்டர் மாரியப்பன் உள்ளிட்ட, ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் அருகிலுள்ள கிராம மக்கள் ஏராளமானோர் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ