தாம்பரம் மாநகர காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 72 பேருக்கு தமிழக முதல்வர் காவலர் நற்பணி பதக்கத்தை வழங்கிய தாம்பரம் மாநகர காவல் ஆணையர்.! 

சென்னை

தாம்பரம் மாநகர காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 72 பேருக்கு தமிழக முதல்வர் காவலர் நற்பணி பதக்கத்தை தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் வழங்கி சிறப்பித்தார். 

தாம்பரம் மாநகர காவல் எல்லையில் கடந்த 3 ஆண்டுகளில் கடலில் மூழ்கி 32 பேர் பலியானதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

கடல் சீற்றம் இருக்கும் இடங்களில் பொதுமக்கள் இறங்க வேண்டாம் ஆணையர் அமல்ராஜ் வேண்டுகோள். 

தாம்பரம் அடுத்த சேலையூர் பதுவஞ்சேரி ஆயுதப்படை மைதானத்தில் தாம்பரம் மாநகர காவல்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக பணியாற்றி வரும் சுமார் 72 காவலர்களுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் காவலர் நற்பணி பதக்கம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் அவர்கள் அனைத்து போலீசாருக்கும் பதக்கங்களை வழங்கி சிறப்பித்தார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் அவரகள்:- 

தமிழக அரசால் ஒவ்வொரு வருடமும் சிறப்பாக பணியாற்றுகின்ற காவல்துறையினருக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் பல்வேறு பதக்கங்கள் வழங்கப்படுகிறது. 

இந்த வருடம் தாம்பரம் மாநகரை சார்ந்த 72 காவலர்கள் மிக சிறப்பாக பணியாற்றியதற்காக அவர்களுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் காவலர் நற்பணி பதக்கம் வழங்கப்பட்டது. 

அவர்களுக்கும் அவர்களின் குடும்பதாரர்களுக்கும் காவல்துறை சார்பாக பாராட்டுகள் தெரிவித்து கொள்ளப்பட்டது. 

கடற்கரைக்கு அருகாமையில் உள்ள இடங்களில் நீச்சல் அனுபவம் இல்லாமல் ஊர்களில் இருந்து சுற்றுலா வருபவர்கள் தெரியாமல் விபத்து நடக்கும் இடங்களில் சென்று கடலில் மூழ்குவதை பார்க்க முடிகிறது கடந்த 3 வருடங்களில் 32 பேர் கடலில் அடித்து செல்லப்பட்டு இறந்திருக்கிறார்கள். 

இதன் காரணமாக விபத்து நடக்கும் இடங்களில் காவலர்கள் நியமிக்கப்பட்டு ஆங்கிலம் மற்றும் தமிழிலும் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது கடலோர காவல்படை போலீசார், நீச்சல் தெரிந்த மீனவர்கள் கடலில் அகப்படுபவர்களை பாதுகாப்பாக மீட்கவும் பணியில் உள்ளனர். 

காவல்துறை சார்பாக பொதுமக்களிடம்,  சந்தேகத்திற்கிடமான இடங்களிலும் கடல் சீற்றம் இருக்கும் இடங்களிலும் இறங்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

செய்தியாளர் 

       S S K