கிருஷ்ணகிரியில் 58-வது நூலக வார விழா நடைபெற்றது.!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் 58-வது நூலக வார விழா நடைபெற்றது.!

கிருஷ்ணகிரியில் 58-வது நூலக வார விழா நடைபெற்றது.மாவட்ட மைய நூலக வார விழாவில், கிருஷ்ணகிரி நூலக வாசகர் வட்டம், மைய நூலகம் மற்றும் நூலக ஆணை குழுவும் இணைந்து நடத்திய இந்த விழாவில்,  பர்கூர் வட்ட சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் எம்.எல்.ஏ  அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.  

பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் M.L.A நூலக வார விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட  பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள், மற்றும் நினைவுப்பரிசுகள் வழங்கினர்.

நிகழ்ச்சியில் வாசகர் வட்ட தலைவர்  கமலேசன், செல்வி.கலைச்செல்வி, திருமதி.நளினி, தமிழ் கதிர், பாலகிருஷ்ணன், நரசிம்மன், தமிழவன், ரவீந்தர், வாசகர் ஜாய் (மாநிலத் தலைவர் மற்றும் பயிற்சி இயக்குனர் நுகர்வோர் விழிப்புணர்வு சங்கம்), சுரேஷ்குமார், ரவீந்தர், ஸ்ரீரங்கன், முதல் நிலை நூலகர் சுப்பிரமணி, இரண்டாம் நிலை நூலகர்  நந்தகுமார், மாவட்ட மைய நூலக அலுவலர் சக்திவேல், நூலக பணியாளர்கள் திருமதி.ஆர்த்தி, திருமதி.நளினி, திருமதி.நீலா, திருமதி.கன்னிகா, திருமதி.சாந்தி, சுரேஷ் என அனைவரையும் கௌரவித்து நூலக பெருமையும், சிறப்பினையும் பற்றி பேசினார்.

செய்தியாளர் 

மாருதி மனோ