மாவட்டத் துணைத் தலைவர் பி.சி. சேகரின் இல்லத் திருமண வரவேற்புவிழா.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் பி.சி. சேகர் இல்லத் திருமண விழாவில் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் கோபிநாத் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர் மதியழகன் ஆகியோர் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் துணைத் தலைவர் பி.சி. சேகரின் இல்லத் திருமண வரவேற்புவிழா நடைபெற்றது.

கிருஷ்ணகிரி பழையபேட்டையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் மணமக்களான அர்ச்சனா, தாமரைச்செல்வன் ஆகியோரின் திருமண வரவேற்பு விழாவில் கிருஷ்ணகிரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் மற்றும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்ட மன்ற உறுப்பினருமான மதியழகன் ஆகியோர் வருகை தந்தனர்.
அப்போது மணமக்களான அர்ச்சனா மற்றும் தாமரைச்செல்வன் ஆகிய மணமகளுக்கு நினைவு பரிசுகளை வழங்கி மணமக்களான இருவரும் இன்று போல என்றும் மண வாழ்க்கையில் இணைந்து எல்லா நன்மைகளையும் பெற்று நீடித்து வாழ வேண்டுமென வாழ்த்தினார்கள்.
இதன் முன்னதாக மணமக்களை வாழ்த்திட வருகை தந்த கிருஷ்ணகிரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் மற்றும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்ட மன்ற உறுப்பினருமான மதியழகன் ஆகியோரை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் பி.சி.சேகர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
அப்போது காங்கிரஸ் கட்சியின் திட்ட குழு உறுப்பினர் ரகு, மாவட்ட துணைத் தலைவர் ராமத்துல்லா, மாவட்ட செயலாளர் ஹரி, திமுக நகர பொறுப்பாளகள் அஸ்லாம், வேல்மணி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு மணமக்களை அட்சதை தூவி வாழ்த்தினார்.
செய்தியாளர்
மாருதி மனோ
