ஆந்திராவில் நடைபெற்ற அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் தேசிய மாநாட்டில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பங்கேற்பு.!
அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் தேசிய மாநாடு, ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடாவில் மார்ச் மாதம் 27, 28 & 29 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சிறப்பு அழைப்பாளாக கலந்து கொண்டு நேற்று ( 28 - 03 - 2026 ) சிறப்புரை ஆற்றினார்.
இன்று மத்திய மாண்புமிகு அமைச்சர் சந்திரசேகர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் தோழர் டி.எஸ்.ஆர். சுபாஷ், பொதுச் செயலாளர் தோழர் கே. ரமேஷ்குமார், புதுச்சேரி மாநில தலைவர் தோழர் எம்.பி. மதிமகாராஜா, ஆகியோருடன் தேசிய குழு உறுப்பினர்கள் ஐயா எம்.டி. இராமலிங்கம், கோவை எஸ். மோகன்ராஜ், சதயம் பாபு, அலெக்ஸ் புரூட்டோ, காயல் அகமது சாகிபு, தூத்துக்குடி சங்கர், மஹாவீர் சந்த் ஜெயின், எழில் ஆசீர்வாதம், A1 கண்ணன், தருமபுரி சுரேஷ், தோழர் உமாபதி கிருஷ்ணன், டாக்டர் கே.வி.தேவராஜன், MJF Dr.T. தேவராஜ், K.A.T. அன்சாரி, P.G. பாலகிருஷ்ணன், மதுரை P. பாண்டியராஜன், காஞ்சிபுரம் S.R. மணிகண்டன், கிருஷ்ணகிரி C.S. சசிகுமார், தோழர் முத்து கண்ணன், ஆகியோருடன் சிறப்பு பிரதிநிதிகளாக, மாநில துணை தலைவர் கழுகு கே. ராஜேந்திரன், தூத்துக்குடி புறநகர் மாவட்டத் தலைவர் J. இருதய ஞான ரமேஷ், தலைமை அலுவலக நிர்வாகி பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

2026 - 2028 ஆண்டின் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதன் பதவி காலம் மூன்று ஆண்டுகளாகும்.
அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் தேசிய செயலாளராக, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் தோழர் டி.எஸ்.ஆர். சுபாஷ் மீண்டும் தேர்வு.
தேசிய செயற்குழு உறுப்பினராக கோவை எஸ். மோகன்ராஜ் அவர்கள் தேர்வு செய்யப்பட்டு தேர்தல் அதிகாரி அவர்களால் அறிவிக்கப்பட்டார்.
அகில இந்திய தலைவர்கள் மற்றும் அனைத்து மாநில நிர்வாகிகள் தேர்வு பெற்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
