புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்த நபர்களுடன் பனையூரில் தவெக அலுவலகத்தில் நேர்காணல்.!
சென்னை
புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்த நபர்களுடன் பனையூரில் தவெக அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற்று வருகிறது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில், புதுச்சேரியில் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்த நபர்களுடன் நேர்காணல் நடைபெற்று வருகிறது.
சில தினங்களுக்கு முன்பாக தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்த நபர்களில் ஒரு சில நபர்களை தவெக தலைவர் விஜய் நேர்காணல் செய்தார்.
அதில் 30க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வேட்பாளர்கள் உறுதி செய்ததாக தகவல் வெளியானது.
அதனைத் தொடர்ந்து இன்று புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்த நபர்களுடன் பனையூரில் நேர்காணல் நடைபெற்று வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகளான என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் நேர்காணல் நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட விரும்புவர்கள் இந்த நேர்காணலில் கலந்து கொண்டுள்ளனர்.
இன்றைய தினமே புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் உறுதி செய்யப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
செச்ச்தியாளர்
S S K
