துத்திகுளம் பள்ளியில் புத்தக தூதுவர் திட்டம் தொடக்க விழா .!
தென்காசி

துத்திகுளம் பள்ளியில் புத்தக தூதுவர் திட்டம்
தொடக்க விழா
தென்காசி ஆக 28
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டாரம் துத்திகுளம் இந்து நடுநிலைப் பள்ளியில் புத்தக தூதுவர் திட்டம் ஸ்மார்ட் வகுப்பறை தொடக்க விழா ஆகிய இருபெரும் விழா நடந்தது . இவ்விழாவிற்கு ஆலங்குளம் வட்டார கல்வி அலுவலர் வெர்ஜினாள் தலைமை வகித்தார். சீர் வாசகர் வட்ட தென்காசிமாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் மேனாள் பள்ளி மாணவர் குவைத் சின்னச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியராஜ் அனைவரையும் வரவேற்றார்.
ஏழாம் வகுப்பு மாணவிகள் துர்கா நந்தினி, சரண்யா, சந்திரா குழுவினரின் வரவேற்பு நடனம் நடந்தது. இவ்விழாவில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியின் சொந்த தொகுதியில் காட்டூர் திருவெறும்பூர்அரசு மேல்நிலைப் பள்ளியில் முதன் முதலாக கடந்த மாதம்பள்ளிக்கல்வித்துறை அமைச்சரால் தொடங்கி வைக்கப் பட்ட 6,7,8 மாணவ மாணவிகளுக்கு வாசிப்பு இயக்கத்தை அதிகரிப்பு செய்திட மாதம் ஒரு புத்தகம் வழங்கும் திட்டத்தில் சீர்வாசகர் வட்டத்தின் சார்பிலான முதல் வெளியீட்டு புத்தகமான அன்பளிப்பு என்ற புத்தகத்தினை- புத்தக தூதுவர் திட்டத்தை தொடர்ச்சியாக
பள்ளிகளுக்கு எடுத்துச் செல்லும் வகையில் மாதந்தோறும் இப்பள்ளியில் பயிலும் 6 ,7,8 வகுப்பு மாணவ மாணவிகளுக்கு சென்னை வளவன் சீர்வாசகர் வட்ட உறுப்பினர் வெலன்டினா ஆகியோர் வழங்கி புத்தக வாசிப்பின் அவசியம் புத்தக தூதுவர் திட்டம் நோக்கம் குறித்து தெளிவாக பேசினர்
பின்னர் மேனாள் மாணவர்கள் ராம்குமார் சின்னச்சாமி ஆகியோரின் நன்கொடையால்
பள்ளிக்கு பெறப்பட்ட புதியஸ்மார்ட் வகுப்புஅறையை ஆலங்குளம் வட்டார கல்வி அலுவலர் வெர்ஜினாள் தொடங்கி வைத்தார். பள்ளி பட்டதாரி ஆசிரியர் அந்தோணிசாமி நன்றி கூறினார். இவ்விழாவில் ஆசிரியர்கள் ஜோசப்பின் தெரசா, ஜோசப் ஸ்டீபன், பிரான்சிஸ் அந்தோணியம்மாள், செல்வம், ரோஸி, சத்யா அடைக்கல மேரி, மற்றும் பெற்றோர்கள் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்