மிட்டஹள்ளி கிராமத்தில் தேங்காய் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் தேங்காய் கொள்முதல் நிலையம் திறப்பு. !

கிருஷ்ணகிரி

மிட்டஹள்ளி கிராமத்தில் தேங்காய் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் தேங்காய் கொள்முதல் நிலையம் திறப்பு. !

மிட்டஹள்ளி கிராமத்தில் தேங்காய் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் தியாகி லோகநாதன் முனியம்மாள் தேங்காய் கொள்முதல் நிலையத்தினை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சமரசம் திறந்து வைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டினம் அருகே உள்ள மிட்டஹள்ளி கிராமத்தில்  மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் காங்கிரஸ் கட்சியின் தியாகியும், தொழில் அதிபருமான பி.லோகநாதன் முனியம்மாள் தேங்காய் கொள்முதல் மற்றும் கொப்பரை கொள்முதல் நிலையத்தின் திறப்பு விழா நடைபெற்றது,

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினருமாரும், முன்னாள் மிட்ட ஹள்ளி ஊராட்சி மன்றத் தலைவருமான எல்.சுப்பிரமணியன் மற்றும் அவரின் துணைவியர் திருமதி சாந்தி ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள்  சட்டமன்ற உறுப்பினரும் மருத்துவருமான சமரசம் மற்றும் தொழில் அதிபரும் தேங்காய் வியபாரியுமான சுந்தரம் ஆகியோர் கலந்துக் கொண்டு தேங்காய் விவசாயிகளை ஊக்கு விக்கும் விதமாக துவங்கப்பட்டுள்ள தேங்காய் கொள்முதல் நிலையத்தினை குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தனர்.

மேலும் இந்த விழாவின்போது கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், தொழிலாளர் அணி மாவட்ட தலைவர் ராமச்சந்திரன், ஜெயவேல், ஊர் கவுண்டர் ராமமூர்த்தி, குணசேகரன், சிவானந்தம், காவேரி, வேடி, பள்ளி தாளாளர் கிருஷ்ணன், ஜே.சி ஐ செந்தில்,  வெங்கட்ராஜ், வரதராஜ், ஊர் கவுண்டர் கணேசன், ஜெயவேல், தேங்காய் வியாபாரி புதூர் வேடி, மேஸ்திரிகள் பூங்காவனம், துரை, ராஜேந்திரன், மாரிமுத்து, பூக்கடை தண்டபாணி, பெயின்டர் குமரேசன், ஹோட்டல் அதிபர் கோவிந்தசாமி, ராமன், முன்னாள்  ஜேசிஸ் மண்டல தலைவர் சுரேஷ், அருள்மணி உள்ளிட்ட தேங்காய் விவசாயிகளும், கிராம மக்களும் பெரும் திரளாக இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ