அதிமுக கட்சியின் சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் கட்சி வளர்ச்சிப்பணிகள்  குறித்தும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.!.

கிருஷ்ணகிரி

அதிமுக கட்சியின் சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் கட்சி வளர்ச்சிப்பணிகள்  குறித்தும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.!.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், கெலமங்கலம் மேற்கு ஒன்றிய  அதிமுக செயலாளர் ஜெயபால் தலைமையில் அதிமுக கட்சியின் சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் கட்சி வளர்ச்சிப்பணிகள்  குறித்தும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாநில அம்மா பேரவை மாநில இணை செயலாளர் கலசப்பாக்கம் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு பேசுகையில்......

தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தேர்தல் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் இதில், சமூக ஊடகங்களை முழுமையாக பயன்படுத்தி, கட்சி கோட்பாடுகள், வளர்ச்சி பணிகள் மற்றும் பொதுமக்கள் நலத்திட்டங்களை மக்கள் மத்தியில் விரைவாக விரிவுபடுத்தும் வகையில் செயல்திட்டங்கள் குறித்து சமூக ஊடகங்களில் கட்சி தாக்கத்தை அதிகரிக்க புதிய முயற்சிகள், வீடியோ, கிராபிக்ஸ், மெம்கள் மற்றும் நேரலை (live) நிகழ்ச்சிகள் மேற்கொள்ள வேண்டியதின் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது, 

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவை தலைவரும், மாமன்ற உறுப்பினருமான நாராயணன், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பேரவை செயலாளர் சிட்டி ஜெகதீஷ், கெலமங்கலம் பேரூர் கழக செயலாளர் பழனிசாமி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பூத் கமிட்டி பயிற்சியாளர்கள் சேலம் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் சதீஷ், சேலம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டம் செயலாளர் பிரசன்னா, சேலம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட இணை செயலாளர் யாதவிரபு, எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் நாகேஷ், கழக நிர்வாகி ராம் மூர்த்தி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் பிரசன்னா, திருவண்ணாமலை மாவட்டம் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட துணை செயலாளர் சசிகுமார் மேலும் வட்டக் கழக செயலாளர் கோபால ராமச்சந்திரன், பூத் கமிட்டி கிளை கழக நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ