மகாத்மா காந்தியின் திரு உருவச்சிலைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை .!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி பழையபேட்டையில் காந்தியின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் திரு உருவச்சிலைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி பழையபேட்டையில் மகாத்மா காந்தி வந்து உரையாற்றிய இடத்தில் அவரது நினைவாக காங்கிரஸ் கட்சி சார்பில் திரு உருவச்சிலை அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் காந்தியின் பிறந்தநாள் காந்தியின் நினைவு நாள் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தியின் திரு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பாக 79-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவிற்கு மாநில எஸ்.சி எஸ்.டி துறை அமைப்பாளர் ஆறுமுக சுப்பிரமணி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு நகர மன்ற உறுப்பினர் விநாயகம் ,முபாரக், மாவட்ட பொதுச் செயலாளர் அப்சல், மாவட்டச் செயலாளர்கள் சக்கரவர்த்தி, டெம்போ ஹரி, மாரியப்பன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் சக்திவேல், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் கமலக்கண்ணன், முனுசாமி,ஆவின் அன்பரசன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்,
மேலும் இவ்விழாவிற்கு மாவட்டத் துணைத் தலைவர் தளபதி ரகமத்துல்லா வரவேற்புரை ஆற்றினார், கிராம கமிட்டி சீரமைப்பு அமைப்பாளர் ஆகா கிருஷ்ணமூர்த்தி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். முன்னாள் மாவட்டத் தலைவர்கள் நாராயணமூர்த்தி, ராஜகுமாரவேல், மாவட்டத் துணைத் தலைவர் பி.சி.சேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரவர்மா, முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் துரை என்கின்ற துரைசாமி ஆகியோர் இனிப்புகள் வழங்கி வாழ்த்துரை வழங்கினார்கள்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் முன்னாள் நகர தலைவர் வின்சென்ட், மனித உரிமை துறை மாவட்ட தலைவர் நாகராஜ், ஓ. பி .சி. மாவட்ட தலைவர் அஜித் பாஷா, மாவட்ட செயலாளர் பிரஸ் சரவணன், குட்டி என்கின்ற விஜயராஜ், அன்பு ராஜ், வட்டாரத் தலைவர் சித்திக் ,ஷாநவாஸ், ராஜேந்திரன், நடேசன்,ஏழுமலை, ரங்கநாதன், மணி, துரைசாமி, ஜே கே பாபு ,வெங்கடாசலம், மூயின் முஸ்தாக் ,கொத்தூர் முனீர், முனவர் அஜிசுல்லா, சீனி உள்ளிட்ட ஏராளமான காங்கிரசார் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ