அஞ்சலகங்களில் ஆதார் சேவை நீடிப்பு .!

தென்காசி

அஞ்சலகங்களில் ஆதார் சேவை நீடிப்பு .!

அஞ்சலகங்களில் ஆதார் சேவை நீடிப்பு 

அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தகவல் 

தென்காசி ஆக - 25

தென்காசி, சங்கரன்கோவில் கோவில்பட்டி தலைமை அஞ்சலகங்களில் அனைத்து வேலை நாட்களிலும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஆதார் சேவை  நீட்டிக்கப் படுவதாக அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

மத்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு சேவைகளை பெற ஆதார் எண் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. பொது மக்கள் பலர், ஆதார் சேர்க்கை மற்றும் ஆதாரில் முகவரி மாற்றம், பெயர் மாற்றம், திருத்தம் போன்ற சேவைகளை சிரமமின்றி பெறும் வகையில் அஞ்சலகங்களில் ஆதார் சேவை மையங்கள் செயல்பட்டுவருகின்றன. கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்தில் , கோவில்பட்டி, சங்கரன்கோவில் மற்றும் தென்காசி தலைமை அஞ்சலகங்கள் மற்றும் 29 அடையாளப்படுத்தப்பட்ட துணை அஞ்சலகங்களில் ஆதார் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

ஆதார் எண்ணை பொது மக்களுக்கு வழங்கும் மற்றும் அதன் தகவல்களை பரமரிக்கும் அமைப்பான UIDAI ஆனது பொதுமக்களை 10 ஆண்டுகளில் ஒரு முறையேனும் தங்கள் அடையாளம், முகவரி தொடர்பான விபரங்களை ஆதாரில் அப்டேட் செய்ய பரிந்துரைத்துள்ளது. இதனால் ஆதார் மையத்துக்கு வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

மேலும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர், அவர்களின் பணி நேரத்தில் ஆதார் மையத்தை அணுகி அந்த சேவையை பெறுவதிலுள்ள சிரமத்தை போக்கும் வகையிலும் கோவில்பட்டி, சங்கரன்கோவில் மற்றும் தென்காசி தலைமை அஞ்சலகங்களில் வரும் 22.08.2025 முதல் அனைத்து வேலை நாட்களிலும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஆதார் சேவை  நீட்டிக்கப் படுவதாகவும் இந்த சேவையினை பொதுமக்கள், வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள் என 
பலதரப்பட்ட  மக்கள் பெற்று பயனடையுமாறு கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

செய்தியாளர்

AGM கணேசன்