தென்காசி மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த வேண்டும் தென்காசியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் பேட்டி
தென்காசி

தென்காசி மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த வேண்டும்
தென்காசியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் பேட்டி
தென்காசி ஜூலை 31
தென்காசி மாவட்டத்தில் சட்டமன்ற உறுதிமொழி குழுவினருடன் ஆய்வுக்கு வந்த
பாமக சேலம் மேற்கு மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் அருள் தென்காசி மாவட்ட பாமக மாவட்ட செயலாளர் அலுவலகத்திற்கு வருகை புரிந்து அடுத்த மாதம் 10ஆம் தேதி பூம்புகாரில் நடைபெற உள்ள மகளிர் பெருவிழா மாநாடு நடை பெறுவதை முன்னிட்டு மாவட்டச் செயலாளர் சிங்கராயன் தலைமையில் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தபோது அடுத்த மாதம் நடைபெறும் மாநாட்டின் நோக்கமே சாதிவாரியாக கணக்கெடுத்து அவர்களுக்கான இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும்.
பழைய குற்றால அருவிகளில் மாலை 6 மணிக்கு மேல் குளிக்க தடை விதித்த காரணத்தினால் வெளியூரில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள அருவிகளில் குளிக்க செல்வதாகவும் இதனால் சுற்றுலா பயணிகளை நம்பி தென்காசி மாவட்டத்தில் உள்ள பூர்வகுடி மக்கள் பெரிதும் பாதிக்கப் படுவதாகவும் அதைப் பாமக கட்சி சார்பில் வன்மையாக கண்டிப்பதாகவும் கூறினார்.
அடவி நைனார் அணையை ஒட்டி உள்ள பூங்காவை பராமரிக்க வேண்டும் என்றும் கூறினார். தென்காசி மாவட்டத்தில் உள்ள எல்லைப் பகுதிகளில் உள்ள சுற்றுலா தளங்களை மேம்படுத்த வேண்டும் என்றும் தென்காசி மாவட்டத்தில் பெரும்பாலான ஆட்சியர் கேரளா மாநிலத்தைச் சார்ந்தவராக இருந்திருக்கிறார்கள் அவர்களது மாநிலத்திற்கு உறுதுணையாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற ஆணவக் கொலை வழக்கை சி பி சி ஐ டி. ல் இருந்து சிபிஐ க்கு மாற்ற வேண்டும் என்றும் கூறினார்.
இந் நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் சிவராஜ், மாவட்ட துணை தலைவர் மகாதேவன், மாவட்ட தொழில் சங்க செயலாளர் சசி சுந்தர், மாவட்டத் துணைச் செயலாளர் பள்ளக்கால் கிருஷ்ணன், மாவட்ட மகளிர் அணி ஜெயக்குமாரி, மகேஷ் என்ற மாடத்தி, மாவட்ட பொருளாளர் அயோனா, ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்