தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த 5 பேர் கைது. இரண்டு இருசக்கர வாகனம் பறிமுதல். !

சென்னை

தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த 5 பேர் கைது. இரண்டு இருசக்கர வாகனம் பறிமுதல். !

கிழக்கு தாம்பரத்தில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த 5 பேர் கைது. இரண்டு இருசக்கர வாகனம் பறிமுதல். 

25க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை திருடியதாக வாக்குமூலம்.  

சென்னை தாம்பரம் அடுத்த கிழக்கு தாம்பரம் ரயில் நிலையம் அருகே இருசக்கர வாகனங்களை பொதுமக்கள் விட்டு விட்டு சென்று விடுகின்றனர். 

இதனால் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருடு போவது வாடிக்கையாகி வந்தது. 

இது தொடர்பாக கடந்த மாதம் 27ம் தேதி பெருங்களத்தூரை சேர்ந்த மில்டன்(37), என்பவர் அவருடைய இருசக்கர வாகனத்தை ரயில் நிலையில் பார்க்கிங் பகுதி இல்லாத இடத்தில் விட்டு சென்று திரும்பி வந்து பார்த்த போது இருசக்கர வாகனம் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.  

இது குறித்து சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து 10 சிசிடிவி கேமராக்களை அந்த பகுதியில் பொருத்தி தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது மர்ம நபர்கள் இருவர் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்வதை கண்டுபிடித்தனர், அவர்களை பின் தொடர்ந்து  பார்த்ததில் பெருங்களத்தூர் குண்டுமேடு பகுதியில் உள்ள விஜயகுமார்(எ)ஜெயகுமார்(56), லிங்கதுரை(40), கண்ணன்(32), ஆகியோர் நடத்தும் பழைய கயலான் கடையில் விற்று வந்தது தெரியவந்தது. 

திருடிய இருசக்கர வாகனத்தை விற்கும் போதே கையும் களவுமாக பிடித்த காவல்துறையினர் 5 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். 

விசாரணையில் கிழக்குத் தாம்பரத்தை சேர்ந்த சாம்பிரஸ்(27), கடலூரை சேர்ந்த சுகவர்மன்(22), சேர்ந்து இருசக்கர வாகனத்தை திருடி குண்டுமேடு பகுதியில் கயலான் கடை நடத்தி வரும் விஜயகுமார்(எ)ஜெயகுமார், லிங்கதுரை, கண்ணன் ஆகியோரிடம் கொடுப்பதும் அவர்கள் இருசக்கர வாகனத்தை பிரித்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இது வரை 25 இருசக்கர வாகனங்களை திருடி உதிரி பாகங்களாக விற்பனை செய்துள்ளனர். 

அவர்களிடமிருந்து இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து 5 பேரையும் கைது செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

செய்தியாளர்

         S S K