பழைய குற்றாலத்தில் ஆட்டோ மீது வேன் மோதி விபத்து .!
பழைய குற்றாலம்

பழைய குற்றாலத்தில் ஆட்டோ மீது வேன் மோதி விபத்து
பெண் பலி - வேன் டிரைவர் கைது
தென்காசி ஜூலை 30
தென்காசி மாவட்டம் பழைய குற்றாலத்தில் ஆட்டோ மீது வேன் மோதியதில் ஆட்டோவில் சென்ற பெண் பலியானார். மேலும் 10க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை அம்பத்தூரை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் குற்றாலத்தில் இருந்து பழைய குற்றாலத்தில் குளிப்பதற்காக இன்று காலை குற்றாலத்தை சேர்ந்த அழகிரி என்பவரின் ஆட்டோவில் பழைய குற்றாலம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது சிவகங்கையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஒரு வேனில் பழைய குற்றாலத்தில் குளித்துவிட்டு திரும்பிய போது பழைய குற்றாலம் இசக்கி ரிசார்ட்ஸ் அருகே வந்து கொண்டிருந்த போது
அப்பகுதியில் இருந்த டிரான்ஸ்பார்மரில் மோதி எதிரே வந்து கொண்டிருந்த ஆட்டோ மீது மோதி வேன் சாய்ந்துள்ளது இதில் வேனில் வந்தவர்களுக்கும் ஆட்டோவில் வந்தவர்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆட்டோவில் வந்த சென்னை அம்பத்தூரை சேர்ந்த யாஸ்மின் (வயது 53) என்பவர் மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.
மேலும் ஒருவர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
மீதமுள்ள 8 நபர்களுக்கும் தென்காசி அரசு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து குற்றாலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதனைத்தொடர்ந்து குடிபோதையில் வேனை ஒட்டி வந்த தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜா (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
செய்தியாளர்
AGM கணேசன்