திருநாவுக்கரசு பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டத்தில் சீருடை வழங்கும் நிகழ்ச்சி.!

தென்காசி

திருநாவுக்கரசு பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டத்தில் சீருடை வழங்கும் நிகழ்ச்சி.!

கிருஷ்ணாபுரம்
திருநாவுக்கரசு பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டத்தில் சீருடை வழங்கும் நிகழ்ச்சி

தென்காசி ஜூலை 29 

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் சரகம் கிருஷ்ணாபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான திருநாவுக்கரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் 130 மாணவர்களுக்கு   பள்ளி முகநூல் முகவரியான திருநாவுக்கரசு 
பி எஸ் முகநூல் நண்பர்கள் வாயிலாக  ரூ 40000 மதிப்பிலான யோகா சீருடைகளை வழங்க புளியங்குடியைச் சார்ந்த பள்ளியின் நல்லாசிரியர் பழனிக்குமார் நிதி திரட்டினார்.

மேலும் அவர் 10 ஆண்டுகளாக  தொடரந்து முகநூல் நண்பர்கள் சார்பில் மாணவர்களுக்கு 1 முதல் 2 விதமான  யோகா சீருடைக்கு அனைத்து மாணவர்களுக்கும்  உதவி புரிந்து வருகிறார்.அதனை பள்ளியில் நேற்று நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டத்தில்  பள்ளி செயலர் செல்லம்மாள் பள்ளி கல்வி உறுப்பினர்  ரெங்கநாயகி மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர்  வெங்கடேஸ்வரன் ஆகியோர் முகநூல் நண்பர்கள் சார்பில் மாணவர்களுக்கு  யோகா சீருடையை வழங்கினர்.

விழா முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் (பொ)  சுப்புலட்சுமி  மாணவர்களுக்கு சீருடை வழங்க உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இதில் அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களும் மற்றும்  100 க்கும்  மேற்பட்ட பெற்றோர்களும் கலந்து கொண்டு யோகா சீருடையை பெற்று அகமகிழ்ந்து நன்றி தெரிவித்தனர்.

செய்தியாளர்

AGM கணேசன்