மேட்டுப்பாளையம் திமுக இளைஞரணி சார்பாக 4 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம். !

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் திமுக இளைஞரணி சார்பாக 4 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம். !

திராவிட மாடல் அரசின் 4 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக் கூட்டம்.!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சங்கர் நகர் பகுதியில் திமுக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் மேட்டுப்பாளையம் இளைஞரணி சார்பாக நடத்தப்பட்டது.

நிகழ்ச்சி கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் தொ.அ.ரவி மற்றும் கோவை வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.ஏ.ஆர்.கே.ஹக்கீம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் நகர இளைஞரணி அமைப்பாளர் S.N.சேட் வரேவேற்புரை வழங்கி துவக்கி வைத்தார்.

பொதுக் கூட்டத்தில் தலைமைக் கழக பேச்சாளர்கள் ஒப்பிலாமணி, சீ.தருண்குமார் ஆகியோர் கலந்து கொண்டு திமுக - வின் சாதனைகளை விளக்கி மக்களிடையே சிறப்புரை ஆற்றினர்.

நிகழ்ச்சியில் சி.ஆர்.ராமசந்திரன், பா.அருண்குமார், டி.ஆர்.சண்முக சுந்தரம், அ.அஸ்ரப் அலி, எஸ்.எம்.டி.கல்யாண சுந்தரம், சுரேந்திரன், அறிவரசு,வழக்குரைஞர் சபீக் மற்றும்  நகர கழக செயலாளர்களாகிய வடக்கு நகர செயலாளர் முகமது யூனஸ், தெற்கு நகர செயலாளராகிய முனுசாமி  ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.

மேலும் இளைஞரணி சார்பாக மணிகண்டன், த.மோகன்ராஜ்,முகமது அஸாருதீன், அகமது சபீக், மு.முகமது அசாருத்தீன் மற்றும் திமு கழக நிர்வாகிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஆசிரியர் & வெளியீட்டாளர்

மேட்டுப்பாளையம் Rafi ( MR )