கே.கே வலசையில் திமுக சாதனை விளக்க பொதுக் கூட்டம்
தென்காசி

கே கே வலசையில் திமுக சாதனை விளக்க பொதுக் கூட்டம்
கவிஞர் காசி முத்து மாணிக்கம் பங்கேற்பு
தென்காசி ஜூன் 30
தென்காசி கிழக்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் குத்துக் கல் வலசையில் கலைஞர் பிறந்தநாள் விழா மற்றும் திமுக நான்காண்டு சாதனை விளக்க தெரு முனை பொதுக் கூட்டம் நடை பெற்றது. இந் நிகழ்ச்சிக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் குமார் தலைமை வகித்தார்.
ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டி.ஆர் கிருஷ்ணராஜா, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் முத்துக்குமார், பேரூர் செயலாளர்கள் சுடலை, குட்டி என்ற சங்கர், முத்தையா, பண்டாரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஆனந்தராஜ் வரவேற்புரை ஆற்றினார். கூட்டத்தில் மாநில வர்த்தக அணி செயலாளர் கவிஞர் காசி முத்து மாணிக்கம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் பேச்சாளர்கள் சாக்ரடீஸ், வெல்டிங் மாரியப்பன், முத்துவேல், சாகுல் ஹமீது கான், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி, இஞ்சி இஸ்மாயில், துணை அமைப்பாளர் ஜீவானந்தம், மாவட்ட அயலக அணி ராமராஜ், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் தர்மராஜ், கார்த்திக், தானுலிங்கம், செந்தில்முருகன், கார்த்திக்ராஜா, கார்த்திகேயன், பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர்கள் கனிராஜா, கார்த்திக், பார்த்திபன், பாலகன் ஒன்றிய நிர்வாகிகள் ஆனந்தன், தங்கபாண்டியன், ஆனந்தராஜ், இசக்கி பாண்டி, சுந்தரம் என்ற சேகர், ரவி, ஆத்தியப்பன், குற்றாலநாதர் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஸ்ரீதர், சுந்தரராஜன், இலஞ்சி சண்முகநாதன், இலஞ்சி குமாரகோயில் அறங்காவலர் பூவையா, கணேசமூர்த்தி, பரமசிவன், சிவன் பாண்டியன், குத்தா லிங்கம் மற்றும் மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர்கள், கிளை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் கிளை செயலாளர் ஜோசப், ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் கதிரவன் நன்றி கூறினர்.
செய்தியாளர்
AGM கணேசன்