தேர்தல் ஆணையத்தை கண்டித்து கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.!
தென்காசி

தேர்தல் ஆணையத்தை கண்டித்து கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தென்காசி ஆகஸ்ட் 23
இந்திய தேர்தல் ஆணைய முறைகேடுகளையும், பாஜகவுக்கு உடந்தையாக இருப்பதையும்
கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தென்காசி மாவட்டத்தின் சார்பில் கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அப்துல் சலாம் தலைமை வகித்தார்.
மாவட்ட நிர்வாகிகள் செயலாளர் ஜலாலுதீன், பொருளாளர் சாதிக், துணைத் தலைவர் அப்துல் பாசித், துணை செயலாளர்கள் ஹாஜா மைதீன், அப்துல்பாசித் புளியங்குடி பிலால், பீர்மைதீன், வடகரை செய்யது அலி, மருத்துவ அணி செயலாளர் அப்துல்லா குட்டி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் முகம்மது ஒலி தேர்தல் ஆணையத்தையும்
மத்திய அரசினையும் கண்டித்து பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினார்.
மாநில செயலாளர் அன்சாரி கண்டன உரையாற்றினார். இதற்கான ஏற்பாட்டினை மாவட்ட தொண்டர் அணி செயலாளர் ஷேக் தாவூத் தலைமையில் கடையநல்லூர் அனைத்து கிளை நிர்வாகிகளும் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் டவுன்கிளை தலைவர் இஸ்மாயில் மதினா நகர் தலைவர் பாதுஷா, பேட்டை கிளை தலைவர் நல்லூர் சுலைமான், ரஹ்மானியாபுரம் கிளை தலைவர் பாரூக் ,மக்கா நகர் கிளை தலைவர் சேகனா, தவ்ஹீத் நகர் கிளை தலைவர் நிரஞ்சன் ஒலி, இ பி கிளை தலைவர் சதாம் உசேன் மற்றும் தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து கிளை நிர்வாகிகள், பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் அப்துல் பாசித் நன்றி கூறினார்.
செய்தியாளர்
AGM கணேசன்