கருத்தபிள்ளையூரில் காங். சிறுபான்மை துறை சார்பில் கிறிஸ்துமஸ் விழா.!

தென்காசி

கருத்தபிள்ளையூரில் காங். சிறுபான்மை துறை சார்பில் கிறிஸ்துமஸ் விழா.!

கருத்தபிள்ளையூரில் காங். சிறுபான்மை துறை சார்பில் கிறிஸ்துமஸ் விழா

மாவட்ட தலைவர் சலீம் தலைமையில் கேக் வெட்டி கொண்டாட்டம்

தென்காசி டிச 18

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை எம்எல்ஏஒப்புதலோடு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை மாநில தலைவர் பாரத்யாத்திரை  உத்தரவுபடி தென்காசி மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பில் தென்காசி மாவட்டம்  கருத்தப் பிள்ளையூர் பகுதியில் அமைந்திருக்கும் அன்னை தெரசா ஸ்டார் பவுண்டேஷனில் உள்ள ஆதரவற்ற முதியோர்கள் சுமார் 100 க்கும் மேற்பட்டோருடன்  கிறிஸ்துமஸ் கொண்டாடும் வகையில் கேக் வெட்டி கொண்டாடி ஆதரவற்ற மக்களுக்கு இனிப்புகளும் வழங்கினர்.

இந் நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட தலைவர் ஹலால்சலீம் தலைமை வகித்தார்.மாவட்ட பொதுசெயலாளர் சர்தார் முன்னிலை வகித்தார்.

இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை தென்காசி மாவட்ட காங். சிறுபான்மை துறை துணை தலைவர் அந்தோணி சாமி செய்திருந்தார்.  

இதில் ஒருங்கிணைப்பாளர்முகைதீன் பிச்சை, மாவட்ட துணைத் தலைவர்கள் புளியங்குடி ஜாகிர் உசேன், நகர தலைவர்கள் ஜாக்கப் அருணோதயம், ஜாஹிர் உசேன்,நகர பொது செயலாளர் செய்யது அலி, 10வது வார்டு தலைவர் பீர் மைதீன்,மற்றும் சையதுமசூது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ரஷீத் கான் நன்றி கூறினார்.

செய்தியாளர் 

AGM கணேசன்