தேமுதிக சார்பில் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை .!

தென்காசி

தேமுதிக சார்பில் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை .!

தேமுதிக சார்பில் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை 

 தென்காசி  டிச 06

தென்காசி மாவட்டம், நன்னகரத்தில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு அவரது நினைவு தினத்தை முன்னிட்டு தேமுதிக சார்பில் மாவட்ட துணைச் செயலாளர் நெடுவயல் குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சிக்கு மேலகரம் பேரூர் செயலாளர் மாரிமுத்து முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில்  ஒன்றிய செயலாளர்கள் சரவணன், லிங்குசாமி, நகர செயலாளர்கள் காதர் ஒலி, பேச்சிமுத்து, செங்கோட்டை நகர அவைத்தலைவர் செல்லத்துரை, இலஞ்சி பேரூர் செயலாளர் ஹரி, அவைத்தலைவர் ஆறுமுகம், மாவட்ட பொறியாளர் அணி செயலாளர் விஜயகுமார், தென்காசி இளைஞரணி செயலாளர் பட்டுராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

AGM கணேசன்