சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த செய்தியாளரின்  உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது

கிருஷ்ணகிரி

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த செய்தியாளரின்  உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந் செய்தியாளரின்  உடல் உறுப்புகள் தானமாக வழங்க பட்டது - மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் அரசு சார்பில் மரியாதை செலுத்தினார்

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் நகர் பகுதியை சேர்ந்த N. அன்பரசன் தினமலர், பிற்பகல் உள்ளிட்ட செய்தி நிறுவனங்களில் வட்டார செய்தியாளராக பணியாற்றி கொண்டிருந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தி சேகரிக்க தனது இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது காவேரிப்பட்டினம் - பாலக்கோடு நெடுஞ்சாலையில் பாரத கோவில் எனும் இடத்தில், எதிரில் வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தார். பின்னர் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கபட்ட நிலையில் நேற்று இரவு மூளைச்சாவு அடைந்தார். இதனால் அன்பரசன் குடும்பத்தார், இன்று 18.3.26  காலை உடல் உறுப்புகளை தானமாக வழங்கினர். உடல் உறுப்புகள் தானமாக வழங்கியதால் 5 பேர் பயன்பெற உள்ளனர். உடல் உறுப்புகள் தானமாக வழங்கியதால்  இறந்து போன அன்பரசன் உடலுக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் மருத்துவக் கல்லூரி முதல்வர், மருத்துவர்கள், செய்தியாளர்கள் பலர் மரியாதை செலுத்தினர்.