கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 333 ஊராட்சிகளில் குடியரசு தினத்தினை முன்னிட்டு கிராம சபைக்கூட்டம் .!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அருகே உள்ள மிட்டஅள்ளி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் எல். சுப்பிரமணியன் மகாத்மா காந்தியின் பெயரை மாற்றக்கூடாது, ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 150 நாட்களாக அதிகரித்து ஊதியத்தை உயர்த்தி வழங்கிட தீர்மானம் நிறைவேற்றக்கோரி மனுவினைக் கொடுத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 333 ஊராட்சிகளில் குடியரசு தினத்தினை முன்னிட்டு கிராம சபைக்கூட்டம் நடத்தப்பட்டது.

இதன் ஒருபகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் ஒன்றியத்திற்கு உட்பட மிட்டஅள்ளி ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது,
காவேரிப்பட்டினம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் ராமசந்திரன் மிட்டஅள்ளி ஊராட்சியில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட திட்ட பணிகள் மற்றும் முடியும் நிலையில் உள்ள பணிகள் குறித்து கிராம மக்களிடம் எடுத்துரைத்தார்.
மேலும் இந்த கிராம சபைக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை உத்தரவின்படி
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் முன்னால் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினருமான எல். சுப்பிரமணியன் கலந்துகொண்டு மகாத்மா காந்தியின் பெயரை மாற்றக்கூடாது, ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 150 நாட்களாக அதிகரித்து ஊதியத்தை உயர்த்தி வழங்கிட தீர்மானம் நிறைவேற்றக் கோரி மனுவினைக் கொடுத்தார். அப்போது திமுக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலர் உடன் இருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
