கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமாரை தேசிய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறினார். !
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமாரை தேசிய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் டாக்டர் சந்திரமோகன் பூங்கொத்து கொடுத்து தனது ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் இ.ஆ.ப.வை ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு அரசு அதிகாரிகள் நேரில் சென்று தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதே போல் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் குமாரை தேசிய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவரும் சமூக நுகர்வோர் பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநில பொதுச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளருமான டாக்டர் சந்திரமோகன் பூங்கொத்து கொடுத்து தனது ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டு தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்களை விரைவாக மக்களுக்கு கிடைத்திடும் வகையில் சிறப்பாக செயல்படுத்தி வருவதை வெகுவாகப் பாராட்டியதோடு இந்த புத்தாண்டில் எல்லா வளமும் பெற்று இன்னும் உங்களுடைய பணி சிறக்க வாழ்த்தினார்.
இதேப்போல கிருஷ்ணகிரி நகர காங்கிரஸ் தலைவர் லலித் ஆண்டனி, காவேரிப்பட்டினம் நகர காங்கிரஸ் பொறுப்பாளர் ஸ்ரீராம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் சேர்ந்த முனியன் ஆகியோர் ஆட்சியரை சந்தித்து தங்களது ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
