கிருட்டினகிரி மாவட்ட தி.க.சார்பில் அம்பேத்கர் நினைவு நாள்.!

கிருஷ்ணகிரி

கிருட்டினகிரி மாவட்ட தி.க.சார்பில் அம்பேத்கர் நினைவு நாள்.!

கிருட்டினகிரி மாவட்ட தி.க.சார்பில் அம்பேத்கர் நினைவு நாள்.

கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி கிருட்டினகிரி வட்டாட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள அவரது சிலைக்கு மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கோ.திராவிடமணி தலைமையில் பொதுக்குழு உறுப்பினர் இல ஆறுமுகம், மேனாள் மாவட்டச் செயலாளர் கா.மாணிக்கம், ஒன்றியத் தலைவர் த.மாது, நகரத் தலைவர் கோ.தங்கராசன், நகர செயலாளர் அ.கோ.இராசா, பெரியார் பெருந்தொண்டர்கள் குயில் தாசன், இரபிக் அகமது, மாவட்ட மாணவரணி தலைவர் இர.அஜய்குமார், மேனாள் ப.க. ஆசிரியரணி நிர்வாகி சா. ஜோதிமணி, பர்கூர் மேனாள் ஒன்றிய செயலாளர் மா.இரகுநாதன் உள்ளிட்ட கழக தோழர்கள் கலந்து கொண்டு புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.

செய்தியாளர் 

மாருதி மனோ