கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி மேலாணைக் குழு கூட்டம் .!
கிருஷ்ணகிரி

பள்ளி மேலாணைக் குழு கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் முன்னதாக உதவி ஆசிரியர் பூ. இராம்குமார் அனைவரையும் வரவேற்றார்.
தொடர்ந்து தலைமை உரையாற்றிய பள்ளித் தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன், பள்ளியின் சிறப்புச் செயல்பாடுகள் மற்றும் பள்ளி, மாணவர்களின் முன்னேற்றம் குறித்தும் பகிர்ந்துக்கொண்டார். பெற்றோர்கள் தமது கருத்துக்களைக் கூறினர்.
செய்தியாளர்
மாருதி மனோ