தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கக் கூட்டம், ரஷ்யா பேகம் தலைமையில் நடைபெற்றது..!

கிருஷ்ணகிரி

தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கக் கூட்டம், ரஷ்யா பேகம் தலைமையில் நடைபெற்றது..!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், அனுமந்தீர்த்தம்  கிளை,  தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கக் கூட்டம், ரஷ்யா பேகம் தலைமையில் நடைபெற்றது.
         
இந்நிகழ்வில் மூத்த அரசியல் தலைவர் சுதாகர் ரெட்டி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்றைய அரசியல் நிலைகள் குறித்து மாவட்ட செயலாளர் R.சேகர் விளக்க உரையாற்றினார்.
        
கூட்டத்தில் சங்க பொறுப்பாளர்கள் ஜெயந்தி, மாது, சரவணன், செல்லம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், மெய்யாண்டிபட்டி கிராம சர்வே எண் 47/10 உள்ள மொத்த கிராம நத்த நிலத்தையும் உயர்நீதிமன்ற ஆணைப்படி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு கிராம கணக்கில் பள்ளி நிலம் என்று உறுதிப்படுத்தி கொண்டு வரவும், 

பள்ளி நிலத்தை ஆக்கிரமிப்பு தொடர்ந்து அத்துமீறி செய்து வரும் மாதப்பன் EX  தலைமை ஆசிரியர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், 

அனுமன் தீர்த்தம் கிராம சர்வே எண் 45/9 ல் உள்ள போடுகள் நிலத்தில் ஏழை விவசாய கூலி தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு 2 ஆண்டு  மனு கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை, மாறாக யாரோ சில அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து ஏதோ பெருந்தொகையை பெற்றுக்கொண்டு, வழிகள் இருந்தும் உயர் அதிகாரிகளை ஏமாற்றி பச்சையாக பொய் அறிக்கையை, வழி இல்லை என்று கொடுத்து வருகின்றனர்,  பட்டா கொடுக்க மறுத்தும் வருகின்றனர். 

எனவே உடனடியாக இலவச வீட்டு மனை பட்டா தகுதியானவர்களுக்கு கொடுக்கவும், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் நேரடியாக பார்வையிடவும் வலியுறுத்தி,  வட்டாட்சியர் அலுவலகத்தில்  காத்திருப்பு போராட்டம் நடத்துவது...

உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

செய்தியாளர்

மாருதி மனோ