கனிம வளங்கள் கர்நாடகாவிற்கு கடத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு. !

கனிமவள கடத்தல்

கனிம வளங்கள் கர்நாடகாவிற்கு கடத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு. !

கிருஷ்ணகிரி வழியாக ஒரு லட்சம் டன்னுக்கு அதிகமான கனிமங்களை கர்நாடகா மாநிலத்திற்கு கடத்துவதை உடனடியாக தடுத்து நிறுத்திட மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் மனு அளித்தனர்.

தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் சார்பில் மாநிலத் தலைவர் யுவராஜ் தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். 

அதில் தினசரி ஒரு லட்சம் டன்னுக்கு அதிகமான கனிமங்கள் கர்நாடக மாநிலத்திற்கு கிருஷ்ணகிரி ஓசூர் வழியாக தமிழக கனிம வளங்களை கடத்தி அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துவதை உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டியும், 15 தினங்களுக்குள் கனிம வளங்களை கடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும், அவ்வாறு நடவடிக்கை எடுக்காத நிலையில் காவல்துறை மற்றும் நீதிமன்றம் மூலமாக வழக்கு தொடரப்படும் என புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, மாவட்ட ஆட்சியர் உடனடியாக நாங்கள் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், அவ்வாறு நடவடிக்கை எடுத்திருந்தால் கிரஷர் இது என் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார். மேலும் மாதத்திற்கு 60 கிரஸரிலிந்து கனிம வளங்கள் வெளி மாநிலங்களுக்கு செல்வதாகவும் தெரிவித்தார். 200 க்கும் அதிகமான கிரஷர்கள் இயங்கி வரும் நிலையில் கனிமவளத்துறை 99 கிரஷர்களுக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளதாகவும், அனுமதி இல்லாமல் இயங்கும் ரிசர்வ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனையுடன் தெரிவித்தார். 

இந்த நிகழ்வின்போது பொதுச்செயலாளர் தினேஷ், தமிழ்நாடு மணல் லாரி சங்கத்தின் தலைமை நிலைய செயலாளர் வினோத், சென்னை மணல் லாரி சங்க தலைவர் ஐயப்பன், ராணிப்பேட்டை லாரி ஓனர் உரிமையாளர் சங்க தலைவர் ரத்தினம், உள்ளிட்ட பல்வேறு மாவட்ட சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ