கே. ஆர்.பி அணையின் வலது, மற்றும் இடது புறக் கால்வாய்களை முறையாக தூர்வாரப் படாததைத் கண்டித்த்து ஆர்ப்பாட்டம். !

கிருஷ்ணகிரி

கே. ஆர்.பி அணையின் வலது, மற்றும் இடது புறக் கால்வாய்களை முறையாக தூர்வாரப் படாததைத் கண்டித்த்து ஆர்ப்பாட்டம். !

கிருஷ்ணகிரி கே. ஆர்.பி அணையின் வலது, மற்றும் இடது புறக் கால்வாய்களை முறையாக தூர்வாரப் படாததைத் கண்டித்தும் உதவி செயற்பொறியாளரின் அலட்சியப் போக்கினைக் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக  தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் இராமகவுண்டர் பேட்டி.

கிருஷ்ணகிரியில் கே.ஆர்.பி அணையின் பாசன விவசாயிகள் சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது, சங்கத்தின்  ஆலோசகர் கண்ணையா  தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு சங்கத்தின் பொதுச் செயலாளர் வரதராஜ், அனுமந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் இக்கூட்டத்திற்கு தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் இராமகவுண்டர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார்.

மேலும் இந்த கூட்டத்தில் பேசிய இராமகவுண்டர்....
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து வலது மற்றும் இடது புறக்கால்வாய் சந்தூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ள இந்த கால்வாய்களில் மழை வெள்ளத்தால் கால்வாய்கள் புதைவுண்டு போய் உள்ளது, இந்த கால்வாய்களில் திறந்து விடப்படும் தண்ணீர் கடைமடை வரை செல்லாததால்  ஏரிகள் மற்றும் விவசாய நிலங்கள் தண்ணீர் இன்றி கருகும் நிலை உள்ளது.

இது தொடர்பாக கடை மடை வரை தண்ணீர் செல்லும் வகையில் பாசன கால்வாய்களை தூர்வாரப்பட வேண்டும் என வலியுறுத்தி, கிருஷ்ணகிரி அணை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் கடந்த பல ஆண்டுகளாக மனுக்கள் கொடுத்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும்  பொதுப்பணித்துறை  திட்டமிட்டு வாணி ஓட்டு திட்டத்தை முடக்கி வைத்துள்ளார்கள்.

அந்த வாணிஒட்டு திட்டத்தை மறுபரிசீலனை செய்து  செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையிலும் அனைத்து கால்வாய்களும் உயரம் மற்றும் அகலப்படுத்தி தண்ணீர் அதிக அளவுக்கு  பாசனத்திற்கு கொடுக்க வேண்டும். குறிப்பாக வினாடிக்கு கேஆர்பி அணையில் 150 கன அடி தண்ணீர் மட்டுமே கடக்கிறது. அதை 280 கன அடி தண்ணீர் கடத்துகின்ற வகையிலே விரிவு படுத்த வேண்டும். அணை கட்டப்பட்ட பொழுது 1954 ல் 9 ஆயிரம் ஏக்கர் மட்டுமே நீர்பாசனமாக  இருந்ததை தற்போது 25 ஆயிரம் ஏக்கர் பாசனம் கொடுக்கப்பட்டுள்ளது. 

அத்தனையும் ஆயக்கட்டு பகுதியாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையிலே வருகின்ற 26.08.2025 செவ்வாய்க்கிழமை கே.ஆர்.பி. அணை உதவி செயற்பொறியாளர் அலுவலகம் முன்பாக  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் இராம கவுண்டர் தெரிவித்தார்.

மேலும் இந்த கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தினை சேர்ந்த வெங்கடேசன், ரவி, கனகராஜ், பழனி, சின்னசாமி, ரஞ்சித்குமார், கோவிந்தராஜ் மாவட்ட துணை தலைவர், கோவிந்தராஜ், சண்முகம், சீனிவாசன், முனுசாமி, சண்முகம், கோவிந்தராஜ், ராஜ்குமார், சரவணகுமார், பழனி, காளியப்பன்,அமாசி, மாதேஷ், சண்முகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ