மேலகரம்,குற்றாலம் அரசுபள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதி வண்டியிகளை திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் வழங்கினார்.!

தென்காசி

மேலகரம்,குற்றாலம் அரசுபள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதி வண்டியிகளை திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் வழங்கினார்.!

மேலகரம்,குற்றாலம் அரசுபள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதி வண்டியிகளை திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் வழங்கினார்

தென்காசி டிச 08

தென்காசி மாவட்டம், மேலகரம் அரசு மேல் நிலைப்பள்ளி மற்றும் குற்றாலம் ராமாலயம் பண்பொழிதிருமலை  குமாரசாமி கோவில் தேவஸ்தானபெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

மேலகரம் அரசு மேல்நிலை பள்ளியில் நடந்த விழாவிற்கு, மேலகரம் பேரூராட்சி மன்ற தலைவர் வேணி வீரபாண்டியன் தலைமை வகித்தார்.

துணைத் தலைவர் ஜீவானந்தம், பேரூர் திமுக செயலாளர்கள் மேலகரம் சுடலை, குற்றாலம் சங்கர் என்ற குட்டி, ஒன்றிய  செயலாளர் அழகு சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியைகள் கவிதா, ஆதிநாச்சியார் ஜானகி வரவேற்றனர்.

விழாவில் மேலகரம் அரசு மேல் நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் 65 பேருக்கும், ராமாலயம் பள்ளி மாணவிகள் 32 பேருக்கும் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் விலையில்லா மிதி வண்டிகளை வழங்கினார்.

இந் நிகழ்வில் திமுக ஒன்றிய பிரதிநிதி கபிலன், பகவதிராஜ், குருசாமி,  பேரூர் திமுக இளைஞரணி அமைப்பாளர் பார்த்திபன் பேச்சாளர் ஆயிரப்பேரி முத்துவேல், பரமசிவன், குத்தாலிங்கம், வெங்கட் ஆசிரியர்கள் துரை, சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியை ரெஜினா பானு நன்றி கூறினார்.

செய்தியாளர்

AGM கணேசன்