இலஞ்சி குமார கோயில் முழு காப்பு நிகழ்ச்சி .!

தென்காசி

இலஞ்சி குமார கோயில் முழு காப்பு நிகழ்ச்சி .!

இலஞ்சி குமார கோயில் முழு காப்பு நிகழ்ச்சி

தென்காசி அய்யா பிள்ளை குடும்பத்தினர் பங்கேற்பு

தென்காசி ஜூலை 7

தென்காசி மாவட்டம் இலஞ்சியில் பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்றான இலஞ்சி திருவிலஞ்சி குமாரர் கோவில் ஆகும். இங்கு ஒவ்வொரு வருடமும் ஆனி மாதத்தில் நவமி திதி அன்று முழுக்காப்பு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு நவமி திதி முழுக்காப்பு நிகழ்ச்சி தென்காசி அய்யாபிள்ளை குடும்பத்தினரின் சார்பாக நடைபெற்றது. அன்று காலையில் முருகனுக்கு 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரமும் செய்து உச்சிக்கால தீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.  

இந்நிகழ்ச்சியில் ராஜம்மாள் அப்பாசாமி அன்னம்மாள் சிவகாமி அம்மாள் ஆவுடையப்பன் அன்னம்மாள்என்ற லலிதா கார்த்திக் சுப்பிரமணியன் இளங்கோ சித்ரா குமரன் மீனாட்சி நாதன் காவேரி சரஸ்வதி சீதாலட்சுமி என்ற பேபி சரோஜா பரமசிவன் வசந்தி சீதாலட்சுமி ராஜா காயத்ரி உமாதேவி சங்கரநாராயணன் ஏஜிஎம் கணேசன் மாலா சீத்தாராமன் கலா சுந்தரி சுப்பிரமணியன் புவனேஸ்வரி ராஜன் ராணி மனோகர் பவானி செந்தில் முத்துச்செல்வி சுவேதா உலகம்மாள் நாரம்பு நாதன் முத்துலட்சுமி சங்கீதா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

AGM கணேசன்