தொழிற்கடன் வசதியாக்கல் முகாம் மற்றும் மானியத் திட்டங்கள் குறித்த விளக்க கூட்டம்.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, மாவட்ட தொழில் மையம் நடத்திய மாபெரும் தொழிற்கடன் வசதியாக்கல் முகாம் மற்றும் மானியத் திட்டங்கள் குறித்த விளக்க கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள் 30 தொழில் முனைவோர்களுக்கு ரூ.1 கோடியே 73 இலட்சம் மானியத்தில் தொழிற் கடனுக்கான காசோலைகளை வழங்கினார்.

உடன், மகளிர் திட்ட அலுவலர் பெரியசாமி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்ன பாலமுருகன், இந்தியன் வங்கி முன்னோடி வங்கி மேலாளர் சரவணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
