வெண்ணம்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழா.!

கிருஷ்ணகிரி

வெண்ணம்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழா.!

கிருஷ்ணகிரி அருகே உள்ள வெண்ணம்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலந்துக் கொண்ட கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் பி.சி. சேகர் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகள் மற்றும் அரை ஆண்டுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகேயுள்ள வெண்ணம்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் 77-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

பள்ளி தலைமை ஆசிரியர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவரும், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவருமான  பி.சி.சேகர் கலந்துக் கொண்டு தேசிய கொடியினை ஏற்றிவைத்து  மகாத்மா காந்தியின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து பள்ளி, மாணவ, மாணவிகளின் தேசப்பக்தி பாடலுக்கு நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது,
இதன் முன்னதாக குடியரசு தினத்தினை முன்னிட்டு பள்ளி, மாணவ, மாணவிகளுக்கு இடையிலான பேச்சி போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி உள்ளிட்ட பல்வேறுப் போட்டிகள்  நடத்தப்பட்டது, இப்போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ மாணவிகளுக்கு கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் பி.சி. சேகர் சான்றிதழ் மற்றும்  பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.

மேலும் இந்த குடியரசு தின விழாவில் பள்ளியின் ஆசிரியர்களான திருமதி,அமலா ஆரோக்கியமேரி, சகாய ஆரோக்கியராஜ், முன்னால் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் திம்மி , முன்னால் பள்ளியின் கெளரவத் தலைவர்கள், கிருஷ்ணமூர்த்தி, ராமசந்திரன், கெளரவத் தலைவர் கண்ணன், ஊர் கவுண்டர் சீனிவாசன், முருகேசன், முனுசாமி, ஆறுமுகம், மணி, முருகன், சுதாகர் மனோஜ் மற்றும் பள்ளி ஆசிரியர்களான முனிராஜ், சதீஷ், சிவகுமார் உள்ளிட்ட பலர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ