இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் போதை பொருள் தடுப்பு மற்றும் தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கம்..!
கிருஷ்ணகிரி
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் போதை பொருள் தடுப்பு மற்றும் தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கம்.
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி கிருஷ்ணகிரி மாவட்ட கிளை சார்பில், காவேரிப்பட்டினம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள்கள் தடுப்பு மற்றும் தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

பள்ளி தலைமை ஆசிரியர் வளர்மதி தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் ரெட் கிராஸ் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார். இந்த கருத்தரங்கில் வட்டார மருத்துவ அலுவலர் நித்தியா போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
மேலும் கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமல் பிரிவு தலைமை காவலர்கள் திருமதி அனிதா திருமதி ராஜகுமாரி ஆகியோர் போதனை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் மற்றும் அதனால் பதியப்படும் வழக்குகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாக பேசினார்கள்.

மேலும் இந்த கருத்தரங்கில் போதைப்பொருள் தடுப்பு ஒருங்கிணைப்பாளர் திருமதி அனிதா ஜூனியர் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் திருமதி சாந்தினி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். சிறப்பாக செயல்பட்ட 10 மாணவிகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
முடிவில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி காவேரிப்பட்டிணம் துணை கிளை செயலாளர் சண்முகம் நன்றியுரை வழங்கினார்.
செய்தியாளர்
மாருதி மனொ
