5 சிறுவர்கள் வேர்க்கடலை என நினைத்து வேர்க்கடலை என நினைத்து கொட்டாங்கி விஷக் கொட்டைகளை சாப்பிட்டதால் வாந்தி மயக்கம் .!

கிருஷ்ணகிரி

5 சிறுவர்கள் வேர்க்கடலை என நினைத்து  வேர்க்கடலை என நினைத்து கொட்டாங்கி விஷக் கொட்டைகளை சாப்பிட்டதால் வாந்தி மயக்கம் .!

கிருஷ்ணகிரி  மாவட்டம், வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பில்லன குப்பம் ஊராட்சி, கே.திப்பனப்பள்ளி கிராமம், சிவசக்தி நகர் பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி என்பவரது மகன்கள் அஸ்வின்(5), ஆசூன்(4), அரவிந்த் மகன் ரிஷின்(5), ரைகாந்தி மகன் மாலின் (5), கேசவன் என்பவரது மகன் தர்ஷன் (5) உள்ளிட்ட 5 சிறுவர்கள் நேற்று மாலை வேர்க்கடலை என நினைத்து கொட்டாங்கி விஷக் கொட்டைகளை சாப்பிட்டதால் வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

இதனை அறிந்த பெற்றோர்கள் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தார்கள். தகவல் அறிந்த கிருஷ்ணகிரி கிழக்கு  மாவட்ட  செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு.தே.மதியழகன்.,MLA அவர்கள் தனியார் மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை பார்த்து அவர்களின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார். 

மேலும் குழந்தைகளின் மருத்துவ செலவை தன் சொந்த செலவில் தானே ஏற்றுக் கொள்வதாக பெற்றோர்களிடம் தெரிவித்தார். உடன் கழக நிர்வாகிகள்.

செய்தியாளர்

மாருதி மனோ